Published on 13/08/2020 | Edited on 13/08/2020
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கரோனா குணமானதை அடுத்து சித்தராமையா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.