குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அதிகப்படியான மொபைல் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான டீ-அடிக்சன் சென்டர் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
மதுப்பழக்கம் போன்ற தீங்குவிளைவிக்கும் பழக்கங்களுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அடிமைப்பட்டிருப்பது தங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போன்களுக்கு தான்.
இப்படி நாளின் பெரும்பகுதியை போன்களில் கழிக்கும் இளைய தலைமுறையை அதிலிருந்து மீட்பதற்காகவே தற்போது மொபைல் டீ-அடிக்சன் சென்டர்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் ஒரு மனநல மருத்துவர், இரண்டு மருந்தாளுநர்கள் மற்றும் 3 ஆலோசாகர்கள் ஆகியோர் குழுவாக இணைந்து பணியாற்றுகின்றனர்.