Published on 22/01/2019 | Edited on 22/01/2019
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை கரீனா கபூரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. பல வருடங்களாக பாஜக வசம் உள்ள அந்த தொகுதியை கரீனா கபூரை போட்டியிட வைத்தால் வென்றுவிடலாம் என போபால் பகுதி காங்கிரஸ் பிரமுகர்கள் திட்டமியிட்டுள்ளனர். இது தொடர்பாக போபால் பகுதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும் இது குறித்து ராகுல் காந்தி தான் முடிவு செய்யவேண்டும் எனவும் அப்பகுதி காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.