Skip to main content

“பாகிஸ்தானுடைய உண்மையான முகம் இதுதான்”- கௌதம் கம்பீர் ஆதங்கம்

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா இந்து என்பதால் அவர் மீது பாகுபாடு காட்டினார்கள் என்று முன்னாள் பாக் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கனேரியாவும் ஆமாம் நான் இந்து என்பதால் என் மீது சிலர் பாகுபாடு காட்டினார்கள். அதையும் தாண்டி பலர் என் மீது அன்பு காட்டினார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

gautam gambhir

 

 

இதுகுறித்து கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கம்பீர், “ இதுதான் பாகிஸ்தானின் உண்மையான முகம் ஆனால் அதேநேரம் இங்கு பார்த்தோம் என்றால் சிறுருபாண்மையினராக இருந்தாலும் அசாருதின் நீண்டகாலமாக இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்.

இம்ரான் கான் பிரதமராக இருக்கும்போதே அந்நாட்டில் ஒரு விளையாட்டு வீரர் இத்தகைய நிலையை சந்திக்க நேரிட்டுள்ளது. இது ஒரு அவமானகரமானது” என்று கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்