தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை(28.12.2024) பேரணி நடக்கவுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பேரணிக்கு கலந்து கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தே.மு.தி.க. துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
அதன் வரிசையில் தற்போது நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல்.கே.சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று விஜய்யை அழைத்துள்ளனர்.