ஜியோ அறிமுகமானதிலிருந்து தொலைத்தொடர்பு சேவைகளில் அடுத்தடுத்து அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமாக ஜியோ, தன் வாடிக்கையாளர்களை புது புது சலுகைகளைக் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதன் அடுத்தகட்ட நகர்வாக ஜியோ நிறுவனம் ஜிகா ஃபைபர் (GigaFiber) என்னும் பிராட் பாண்ட் சேவையில் இறங்கியிருக்கிறது. ஜிகா ஃபைபர் குறித்த அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதமே ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஜிகா ஃபைபர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் தற்போது இருக்கும் முன்னோட்ட சலுகையில் இதன் வேகம் 100 எம்.பி.பி.எஸ் இருக்கும் எனவும், ஒரு மாதத்திற்கு 100 ஜிபி டேட்டா எனவும், மேலும் இது 90 நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![jj](http://image.nakkheeran.in/cdn/farfuture/4JzLEuncBYAKHLlf-DVLc1QIJ_zBkemAlP4a32v5pgY/1545244268/sites/default/files/inline-images/jio-5-g-in-1_3.jpg)
வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கான 100 ஜிபி டேட்டாவை காலி செய்துவிட்டால் கூடுதலாக 40 ஜிபி-ஐ கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகா ஃபைபர் பொருத்துவதற்கான கட்டணம் ஏதும் இல்லை என்றும், அதேசமயம் இணைப்பை பெறும்போது பாதுகாப்பு வைப்பு தொகையாய் 4,500 செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் எப்போது ஜிகா ஃபைபரில் இருந்து வெளியேறுகிறார்களோ அப்போது அந்த பாதுகாப்பு வைப்பு தொகை திரும்பத்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.