மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், டெல்லியில் போராட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் - விவசாயிகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால், 20 நாளாகப் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில், ஈடுபட்டுவரும் விவசாயிகள், அம்பானி மற்றும் அதானியை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, விவசாயிகள் போராட்டத்தை வைத்து, தங்களுக்கு எதிரான விஷம பிரச்சாரத்தில், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபடுவதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகாரளித்துள்ளது.
ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளாண் சட்டங்கள் மூலமாக ஜியோ நிறுவனம் லாபம் பெறும் என்ற வதந்தியை அந்த நிறுவனங்கள் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அந்த நிறுவனங்கள், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதால், ஜியோ வாடிக்கையாளர்கள், புதிய வேளாண் சட்டங்களால் ஜியோ லாபம் பெறுவதாக நினைத்து, வேறு நிறுவனத்திற்கு மாற பெரும் அளவில் விண்ணப்பித்துள்ளதாவும், அவர்களுக்கு ஜியோ நிறுவனத்தின் சேவை போன்றவற்றில் எந்த குறையும் எனவும் ஜியோ அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதரமற்றது என ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது.