Published on 08/10/2018 | Edited on 08/10/2018
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு உள்ளட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13 வருடங்கள் கழித்து தற்போதுதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 1145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு கழித்து தற்போதுதான் அங்கு உள்ளட்சித் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலை முன்னிட்டு சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டும், சில பகுதிகளில் வேகம் 2g வேகமாக குறைக்கப்பட்டும் உள்ளது.