Published on 05/08/2019 | Edited on 05/08/2019
ஜம்மு - காஷ்மீர் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அமித்ஷா. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ய முடிவு என்று அறிவித்தார்.
ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு.