ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஜெகன்மோகன்.
அந்தவகையில் ஆந்திரா மாநிலத்திற்கு புதிதாக 4 தலைநகரங்களை அமைப்பதற்கான யோசனையில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. வெங்கடேஷ் கூறுகையில், "ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களை உருவாக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டு வருகிறார். நிர்வாக ரீதியாக ஆந்திர மாநிலத்தை 4 பகுதிகளாக பிரிக்கவும், சிறிய நிர்வாக பகுதிகளை ஏற்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆந்திராவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். மத்திய பாஜக தலைவர்களிடம் இதுதொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற்றம் அடையும்" என கூறினார்.