Published on 17/08/2018 | Edited on 17/08/2018

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கேரளா மாநிலத்தில் மழை பெய்து வருகிறது என்கிறது கேரளா அரசும், வானிலை அமைப்பும். கேரளாவில் உள்ள மலப்புழா, இடுக்கு உட்பட 10 மாவட்டங்கள் மழை நீரால் தத்தளிக்கின்றன. கேரளாவின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து அணைகளும் திறந்தவிடப்பட்டுள்ளன. வீடுகள் மூழ்கியுள்ளன, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, சாலைபோக்குவரத்துக்கான பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கேரளாவில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி கேரளா வந்துள்ளார். தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடி நாளை காலை வெள்ளம் பாதித்த பகுதிகளை முக்கிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.