அமெரிக்கா நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐநா சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
ஐநா சபை கூட்டத்தில் பேசுவது பெருமைக்குரிய ஒரு விஷயம். மிகப்பெரிய சுகாதார திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றி வருகிறது. புவி வெப்பமயமாதலால் இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ இந்தியா விரும்புகிறது.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் தருணம் இது. மகாத்மா காந்தியின் போதனைகள் உலகிற்கே வழிகாட்டியாக இருந்து வருகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டு வருகிறது இந்தியா.
நாட்டில் 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 37 கோடி மக்கள் வங்கி கணக்குகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டித்தர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.