தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு ஆண்டு தோறும் 15,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கல்வி அறிவில் 100 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில் ‘ராஜண்ணா படி பாட்டா’ என்ற கல்வி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி இன்னும் 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக பள்ளிகளுக்கு செல்லாத பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அந்த பெற்றோருக்கு ஆண்டுதோறும் ரூ. 15,000 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஜெகன் அறிவித்துள்ளார். இத்திட்டமானது, வருகிற குடியரசு தினத்தில் அமல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.