Skip to main content

“டிசம்பர் 1க்குள் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமையும்”- சஞ்சய் ராவத்

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளையும், சிவசேனா 56 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளையும், காங்கிரஸ் 44 தொகுதிகளையும் பெற்றது. இதில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மைக்கான 145 இடங்களை பெறவில்லை. 
 

sanjay raut

 

 

இந்தத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுக்கு பின்னர் சிவசேனா தங்கள் கட்சிக்கு இரண்டரை வருடங்கள் முதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. மேலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரிடம் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்றும் பாஜக தெரிவித்துவிட்டது. சிவசேனா ஆட்சி அமைக்க 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டது. ஆனால் அதற்குள் ஆளுநர் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் குடியரசுத் தலைவர். 

சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்  இணைந்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தைகள் இன்னும் சென்றுகொண்டிருக்கிறது. சிவசேனாவின் சஞ்சய் ராவத் டிசம்பர் மாதத்திற்குள் நாங்கள் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து வலிமையாக் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் ஆட்சியமைப்பு பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்