முகத்தில் முடி வளர்ச்சி என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையானது. இருப்பினும், அதிகப்படியாக பெண்கள் அதை பெரும்பாலும் விரும்புவதில்லை. மீசை என்றாலே ஆணிற்கு சொந்தமான குறியீடு என்றே கருதப்படும் நிலையில் இந்த எல்லா விதிமுறைகளையும் உடைத்து, மீசை வளர்த்து அதில் பெருமிதமும் கொண்டுள்ளார் கேரள பெண் ஒருவர். அதுவும் மீசை இல்லாமால் வெளியே செல்வது எனக்கு அசவுகரியத்தைத் தரும் என தெரிவித்துள்ளதுதான் இதில் ஹை லைட்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஷைஜா (35 வயது) என்ற பெண் மீசை வளர்ப்பதை ஆர்வமாக மேற்கொண்டு வருகிறார். உண்மையில், ஷைஜா அவரது புருவங்களைத் தொடர்ந்து திரித்துக் கொள்வார், ஆனால் அவரது மேல் உதட்டில் உள்ள முடியான மீசையை மட்டும் அகற்றுவது அவருக்கு பிடிக்காதாம். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அடர்த்தியாகிவிட்ட மீசை முடியை ஷைஜா அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.
"இப்போது மீசை இல்லாமல் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது'' என தெரிவிக்கும் ஷைஜா, ''கோவிட் நோய் தொற்று தொடங்கிய போது, மாஸ்க்கை எப்போதும் அணிவதை நான் விரும்பவில்லை, ஏனெனில் அது என் மீசையை மறைப்பது எனக்கு அசவுகரியத்தைத் தரும்'' எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் "என்னிடம் மீசை இருப்பதால் நான் அழகாக இல்லை என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. மீசையை விரும்புவதால் தான் வளர்க்கிறேன். எனக்கு விருப்பமானதைத்தான் செய்கிறேன்''எனவும் தெரிவித்துள்ளார்.
ஷைஜாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவரது மீசை வளர்க்கும் முடிவுக்கு ஆதரவாக உள்ளனர். அவருடைய மகளும் கூட அதை விரும்புகிறார். மக்கள் தன்னை கேலி செய்கிறார்கள் ஆனால் நான் கவலைப்படவில்லை என அசால்ட்டாக பதிலளிக்கிறார் இந்த மீசை நாயகி.