காஷ்மீரை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி சுட்டு கொன்ற வழக்கில் போலீசார் நான்கு பேர்களை சந்தேகித்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய ஒருவனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
’
கடந்த ஜூன் 14-ஆம் தேதி ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வந்த சுஜாத் புஹாரி அடையாளம் தெரியாத நபர்களால் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூன் 13 மாலை 7.30 மணி அளவில் இஃப்தார் நிகழ்ச்சிக்காக பிரஸ் காலனியில் இருக்கும் தனது அலுவலகத்திலிருந்து கிளம்பிய போது அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் அவருடைய பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஓட்டுனர் ஆகியோர் படுகாயம் அடைந்தார்கள்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது ஒருவரை கைது செய்துள்ளனர். அவன் பெயர் ஜூபேர் காத்ரி. கொலை நடந்த பிறகு சுட்டுக்கொல்லப்பட்ட புகாரியின் உடல் அருகே கிடந்த மூன்று கொலையாளிகளின் போட்டோக்களையும் கொலை செய்யப்பட்ட துப்பாக்கியையும் ஒருவர் காரை திறந்து கையில் எடுக்கும் வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு அந்த வீடியோவில் இருப்பவன் ஜூபேர் காத்ரி என அறிந்த போலீசார் அவனை கைது செய்தனர். அதேபோல் மற்ற மூன்றுபேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.