Skip to main content

செப்டம்பர் 2 ஆம் தேதி விண்வெளியில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்வு- இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி...

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றத்தொடங்கியது.

 

isro chief sivan about chadrayaan 2 lunar orbit injection

 

 

இதுதொடர்பாக பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "இதுவரை யாரும் கால் பதிக்காத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வுக்கான முன்னோடியாக, சந்திரயான் - 2 விண்கலம், இன்று காலை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு சென்று சுற்றத் தொடங்கி உள்ளது. இன்று காலை 9.02 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு 1728 வினாடிகளில் நிறைவடைந்து, நிலவின் சுற்று வட்டப்பாதையில், சந்திரயான் - 2 விண்கலம் சுற்றத் தொடங்கி உள்ளது. இது வரலாற்று நிகழ்வு.

அடுத்து முக்கிய நிகழ்வு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் விக்ரம் லேண்டர் தற்போதைய சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகும், அதன்பின் 3 ஆம் தேதி அதன் சுற்றுவட்டப் பாதையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு லேண்டர் இயல்பாக செயல்படுவதை உறுதி செய்வோம். இந்த நிகழ்வு 3 வினாடிகள் நடைபெறும். திட்டமிட்டப்படி வரும் 7 ஆம் தேதி நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 2 தரையிறங்கும். அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரோ  வர அழைப்பு விடுத்துள்ளோம்" என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்