Skip to main content

இந்தியர்களை வாட்ஸப் மூலம் உளவு பார்த்த இஸ்ரேல் நிறுவனம்... வெளியான அதிர்ச்சி தகவல்...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த உளவு அமைப்புடன் தொடர்புடைய என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ என்ற ஸ்பைவேர் ஒன்றை பயன்படுத்தி வாட்ஸப் மூலம் இந்தியர்களை கண்காணித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

israeli spyware spied indians through whatsapp

 

 

இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என 1400 பேர்கள் கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெகாசஸ் வைரஸ் மூலம், ஒருவரின் மொபைலில் உள்ள பாஸ்வர்ட், குறுந்தகவல்கள் மற்றும் அழைப்பு விபரங்களை உளவு அமைப்பு பெற முடியும்.

கடந்த மே மாதம் வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததால் உடனடியாக அனைவரும் வாட்ஸப்பை அப்டேட் செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் பிரச்சனை சரிசெய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த 1400 முக்கிய நபர்களின் போன்கள் கண்காணிக்கப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். யாருடைய போன்கள் ஹேக் செய்யப்பட்டன என தகவல்கள் ஏதும் தெரிவிக்காத நிலையில், வாட்ஸப் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், வாட்ஸப் நிறுவனம் நவம்பர் 4-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என கூறி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்