அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் ஓடும் ரயிலுக்கு பக்கவாட்டில் நடந்து செல்வது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் ரயில் மோதி தூக்கி வீசப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ச்சியைத் தரும் இந்த காட்சி பார்ப்போர் நெஞ்சைப் பதற வைக்கிறது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் பதினோராம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் ரயிலுக்கு முன்பு இன்ஸ்டா ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு இந்த முயற்சியில் ஈடுபட்டதும், ரயில்வே ஊழியர்களால் மீட்கப்பட்டு இடுப்பும் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.