Skip to main content

இந்திய அணி ஒருநாள், டி20 வீரர்கள் அறிவிப்பு!

Published on 21/07/2019 | Edited on 21/07/2019

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

விராட் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா (துணை கேப்டன்) ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் ஸ்ரேயஸ் ஐயர், பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாகுல், ஜாதவ் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.

india


முகமது சமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகியோரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உலக கோப்பையில் விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தோனி சேர்க்கப்படவில்லை. ராணுவத்துடன் சேர்ந்து நேரத்தை செலவிட இருப்பதால் இரண்டு மாதம் ஓய்வு எடுக்க கோரியிருந்தார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்