Skip to main content

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி... காரணம்..?

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 

indian rupee value touches its lowest in last 8 months

 

 

இன்று காலை வர்த்தகத்தின் ஆரம்பித்திலேயே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் சரிந்து 72 ரூபாய் 3 காசுகளாக இருந்தது. இதனிடையே, இந்திய பங்கு சந்தையில் இன்றைய வர்த்தகம் துவக்கத்தில் சரிவுடன் தொடங்கிய போதிலும், பின்னர் ஏற்றம் கண்டது. அந்நிய செலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு மோசமாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு தற்போது சரிவை சந்தித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்