Published on 25/10/2018 | Edited on 25/10/2018

மத்தியில் ஆளும் பிஜேபி அரசு செய்த ரபேல் போர்விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து முழுக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.