இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரின் தொடக்கமாக குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் உரையாற்றினார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் இந்த உரையைப் புறக்கணித்தது.
இதன்பிறகு மக்களவை பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மதியம் கூடிய மாநிலங்களவையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து மாநிலங்களவையும் பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, இந்தாண்டிற்கான பட்ஜெட் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.