Skip to main content

ஆண்களுக்கான முதல் கருத்தடை ஊசி – இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

கரு உருவாவதைத் தடுக்கும் விதமாக கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் ஆகியவை பல வருடங்களாக புழக்கத்தில் உள்ளன. இந்த  கருத்தடை முறைகள் அனைத்தும் பெண்கள் உபயோகிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கான அறுவை சிகிச்சை முறையாக வாசக்டமி எனும் சிகிச்சை இருந்தாலும் அதைப் பெரும்பாலும் யாரும் செய்துகொள்வதில்லை. இந்நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் முதன் முதலாக ஆண்களுக்கான கருத்தடை ஊசிகளைக் கண்டுபிடித்து அதை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.



இந்தக் கருத்தடை ஊசியின் பலன் 13 ஆண்டுகளுக்கு இருக்கும் எனவும் அதன் பின் தன் திறனை இழக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த ஊசியின் மூலம் மூன்று கட்டங்களாக 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 சதவிகித வெற்றி கிடைத்துள்ளது. அவர்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் கருத்தடை ஊசியாகக் கண்டுபிடித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த ஊசிக்கான ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்