Published on 18/10/2020 | Edited on 18/10/2020
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (19/10/2020) உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மத்திய வங்கக்கடலில் நாளை (19/10/2020) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் இரண்டு நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளது.