இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நிலைக்குறித்து உறுப்பினர்களின் கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014- 2019 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5% ஆக உள்ளது. 2009- 2014 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 6.4% இருந்ததாக விளக்கமளித்தார். எனவே நாட்டில் பொருளாதார மந்த நிலை இல்லை என்றார். பொருளாதாரம் குறித்து அமைச்சர் பேச தொடங்கிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேறினர்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014- ஆம் ஆண்டு முதல் விவாதத்தை நடத்த வேண்டுமென்று கூறும் எதிர்க்கட்சிகள், அதற்கு அரசு பதில் தரும் போது வெளிநடப்பு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறினார்.