Published on 29/01/2019 | Edited on 29/01/2019

கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில் சுமார் 6900 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பினாமி சொத்து பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்படி கடந்த 2016-2017 நிதியாண்டில் 3209 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நிதியாண்டில் 6900 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் முடக்கப்படும் சொத்துக்களுடன் தொடர்புடையவர்களுக்கு 7 வருட சிறைத்தண்டனையும், சொத்து மதிப்பில் 25 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.