உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் இரு பெண்கள் நடத்தும் சலூன் கடையில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சென்று ஷேவிங் செய்து கொண்டுள்ளார் . அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நேகா மற்றும் ஜோதி இவர்களது தந்தை சலூன் கடை நடத்தி வந்தார் .இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட , அதனைத் தொடர்ந்து தந்தையின் சலூன் கடையை நேகாவும் மற்றும் ஜோதியும் தொடர்ந்து நடத்தி வந்தனர் .
ஆண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள துறையில் இந்த இளம் பெண்கள் தொடர்ந்து தொழில் செய்து தங்களது தந்தைக்கான மருத்துவச்செலவை பார்த்துக்கொண்டதுடன் , தங்களது படிப்பையும் தொடர்கின்றனர் .இந்நிலையில் இந்த இரு பெண்களின் கல்வி உதவிக்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஷேவிங் செய்யும் வாய்ப்பை "GILETTE INDIA" நிறுவனம் ஏற்பாடு செய்தது .இதனை புகைப்படத்துடன் சச்சின் தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் . அதில் இது எனக்கு முதல் முறை . நீங்கள் இதனை அறிந்திருக்காமல் இருக்கலாம் .நான் பிறரிடம் ஷேவிங் செய்துக்கொண்டதே இல்லை .அந்த சாதனை தற்போது உடைந்துள்ளது .இந்த பெண்களை சந்தித்ததை பெருமையாக நினைக்கிறேன் என்று சச்சின் கூறினார் .