Skip to main content

இந்தியாவில் 1.65 லட்சம் பேருக்கு கரோனா!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

INDIA CORONAVIRUS 1.65 LAKHS PEOPLES UNION HEALTH MINISTRY


கரோனா வைரஸ் பாதிப்பில் 10- ஆவது இடத்தில் இருந்த இந்தியா 9- ஆவது இடத்த்திற்குச் சென்றுள்ளது. 9- ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,65,799, 10- ஆவது இடத்தில் உள்ள துருக்கியில் 1,60,979 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கரோனா உயிரிழப்பிலும் சீனாவை முந்தியுள்ளது இந்தியா. சீனாவில் கரோனாவுக்கு 4,634 பேர் இறந்த நிலையில் இந்தியாவில் 4,706 பேர் பலியாகி உள்ளனர். 
 


இன்று (29/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,58,333- லிருந்து 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,531- லிருந்து 4,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692- லிருந்து 71,106 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 89,987 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
 

INDIA CORONAVIRUS 1.65 LAKHS PEOPLES UNION HEALTH MINISTRY


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 59,546 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18,616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,982 பேர் உயிரிழந்துள்ளனர். 
 


அதேபோல் தமிழகத்தில் 19,372, குஜராத்தில் 15,562, டெல்லியில் 16,281, ராஜஸ்தானில் 8,067, மத்திய பிரதேசத்தில் 7,453, உத்தரப்பிரதேசத்தில் 7,170, ஆந்திராவில் 3,251, தெலங்கானாவில் 2,256, கர்நாடகாவில் 2,533, கேரளாவில் 1,088, புதுச்சேரியில் 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், 175 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்