ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. உக்ரைனில் 70 க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்த நிலையில் 11 விமான தளங்களையும் அழித்துள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தலைநகரான கிவ்-ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசினார். உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா நலன் தொடர்பாக தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த புதினும் மோடியும் ஒப்புதல் அளித்துள்ளனர். உடனடியாக போர் நிறுத்தம் தேவை எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.