போதையில் பாம்பை சீண்டி மயக்கமடைந்த இளைஞரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாகிரித் பகுதியை சேர்ந்தவர் காஜான். இவர் அப்பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்துக்கு அடிமையான அவர், தினமும் மது குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மது குடித்துவிட்டு வயல்வெளி வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த காஜான், அப்பகுதியில் பாம்பு ஒன்று செல்வதை பார்த்துள்ளார். பாம்பை பார்த்த அவர் அதனை கைகளால் பிடித்து சேட்டை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த பாம்பு அவரை பலமுறை கொத்தியுள்ளது. ஆனாலும் அவர் விடாமல் அதனை பிடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து சரிந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.