
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போரட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சில விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இருப்பினும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்கு எல்லையில், நூற்றுக்கணக்கானோர் கூடி, தாங்கள் உள்ளூர்வாசிகள் என்றும், விவசாயிகள் போராட்டத்தால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள், விவசாயிகளின் டென்ட்களைக் கிழிக்க முற்பட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளும், அவர்களுக்கு எதிராக போராடியவர்களும் ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தக் கலவரத்தில் டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.