Published on 12/12/2018 | Edited on 12/12/2018

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. தொடர்ந்து, கிட்டதட்ட 24 மணிநேரமாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 67 இடங்களில் வெற்றிபெற்று, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாஜக 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் 5 இடங்களிலும் பஹுஜன் சமாஜ்வாதி 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.