இந்தியாவில் கரோனா பாதிப்பு 24 லட்சத்தை தாண்டியது. 24,61,190 பேருக்கு இதுவரை இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டதால் 25 லட்சத்தை நோக்கி மொத்த பாதிப்பு நகர்ந்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் இதுவரை கரோனாவிற்கு 48,040 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 17.51 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 1,007 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 55,573 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல் 6.61 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 64,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா உயிரிழப்பு 1.96 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 70.77 சதவீதமாகவும் உள்ளது.
இந்தியாவில் இதுவரை 2.76 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 8.48 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.