Skip to main content

நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இந்திய இராணுவம்!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

india china

 

இந்திய - சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும் சீன இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட ஐந்து பேர் பலியானதாக சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டது.

 

இந்தியா - சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத் தொடர்ந்து, பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் தம் படைகளை விலக்கின. 

 

இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாங்கோங் ஏரி பகுதியில் முழுமையான படைக்குறைப்பு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள், மூத்த தளபதிகளின் அடுத்தக் கூட்டத்தைக் கூட்டவும், மீதமுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 10வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில், இருநாட்டு இராணுவ அதிகாரிகளின் 11வது கட்ட பேச்சுவார்த்தை நாளை (09.04.2021) நடைபெறவுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்