Published on 08/06/2021 | Edited on 08/06/2021
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்தன. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. கிட்டதட்ட 63 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழ் வந்ததுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 94.3% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.