திருமணத்திற்கு முன்பு காதலனுடன் ஏற்பட்ட தவறான நெருக்கம் காரணமாக கல்லுரி மாணவி கர்ப்பமடைந்த நிலையில் 6 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் சடலத்தை புத்தக பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
![incident in kerala itukki](http://image.nakkheeran.in/cdn/farfuture/WeAPqIHzlYiD2WQrtFA0CO1nPTpEQ9Q4zfDF7AYwUdo/1571305441/sites/default/files/inline-images/z162.jpg)
கேரள மாநிலம் இடுக்கியில் வாத்திக்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி அதே கல்லூரியில் படிக்கும் மாணவனை காதலித்து வந்துள்ளார். இதனால் அவர்கள் அடிக்கடி நெருங்கி பழகியதால் கர்ப்பம் தரித்துள்ளார் அந்த கல்லூரி மாணவி. இப்படி இருக்க 6 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவி அதனை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவருக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த மாணவி. அந்த குறுஞ்செய்தியில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், அதனை தனது புத்தக பையில் வைத்து சுற்றித் திரிவதாகவும் கூறியுள்ளார்.
![incident in kerala itukki](http://image.nakkheeran.in/cdn/farfuture/bFsvsUWUzlslo-D3O9_ltKCdM5JjACIHE_7WcEmP1-Y/1571305467/sites/default/files/inline-images/z163.jpg)
இதனை படித்துப்பார்த்த அந்த சிறுமியின் உறவினர் இந்த அதிர்ச்சி தகவலை அந்த சிறுமியின் பெற்றோருகளிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த வாத்திக்குடி போலீசார் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அந்த சிறுமியின் புத்தக பையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலத்தை கண்ட போலீசார் அந்த சிறுமியின் மீது கொலை வழக்குபதிவு செய்துள்ளனர்.
மேலும் அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்லூரியில் உடன் படித்த மாணவனால் கர்ப்பமடைந்ததாகவும், கர்ப்பமடைந்து 6 மாதம் ஆன நிலையில் குளியறையில் குறை பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டும்மல்லாமல் தன்னை கர்ப்பமாக்கிய அந்த இளைஞனுக்கு அண்மையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாகவும், சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதகாவும் தெரிவித்துள்ளார்.
![incident in kerala itukki](http://image.nakkheeran.in/cdn/farfuture/QUYFcahS5H-hItZGFAQggXnNiKAAZ9OAI80r5Giopvo/1571305484/sites/default/files/inline-images/z164.jpg)
காதலனுடன் ஏற்பட்ட தவறான நெருக்கம் காரணமாக கர்ப்பமடைந்த கல்லுரி மாணவி பிறந்த குழந்தையின் சடலத்தை புத்தக பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.