அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த செனயர் எனர்ஜி சபைன் பாஸ் என்ற நிறுவனத்திடம் கெயில் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, திரவ இயற்கை எரிபொருள் (எல்.என்.ஜி.யை) ஏற்றிக்கொண்டு 25 நாள் பயணத்திற்கு பிறகு எம்.வி. மெரிடியன் என்ற அமெரிக்க கப்பல் மகாராஷ்டிரா தபோல் மின்னுற்பத்தி நிலையம் வந்து சேர்ந்தது.
இந்நிறுவனத்திடம் கெயில் நிறுவனம் ஆண்டிற்கு 35 லட்சம் டன் எல்.என்.ஜி.யை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் வேறு ஒரு ஆலைக்கு 23 லட்சம் டன் இறக்குமதி செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதைத்தொடந்து மகாராஷ்டிராவில் இயங்கி வரும் தபோல் மின்னுற்பத்தி நிலையத்திற்கு எல்என்ஜி எரிபொருளை அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்யவும் கெயில் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனத்துடன் கெயில் நிறுவனம் 20 ஆண்டுகள் இறக்குமதி ஒப்பந்தம் செய்துள்ளதும், அமெரிக்கவில் இருந்து எல்என்ஜி இந்தியாவிற்கு கப்பலில் வருவதும் இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.