2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை வருமாறு;
"ஸ்டார்ட்-அப்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
கரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி வசூல் அதிகரித்து வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது. மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும். குடைக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைரங்கள், ஆபரணக் கற்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படும். கார்பரேட்டுக்களுக்கான கூடுதல் வரி 12 சதவீதத்திலிருந்து ஏழு சதவீதமாகக் குறைக்கப்படுகிறது". இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்ஜெட்டில் வருமான வரி விகித மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தனிநபர் வருமான விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாகத் தொடர்கிறது.