
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று (17-05-24) காங்கிரஸ் சார்பில் ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.