Skip to main content

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019


தமிழகத்தில் 23 இடங்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 705 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கப்படும் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 232 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 31,996 கோடி செலவிடப்பட உள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

 

 

HYDRO CARBON

 

 

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரி கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்றனர். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

HYDROCARBON

 

 

இந்த நிலையில், மக்களவை கூட்டத் தொடரில் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளது என்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் விரிவான பதிலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்