Skip to main content

டெல்லி ரயில்நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!: பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
டெல்லி ரயில்நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!: பலத்த போலீஸ் பாதுகாப்பு

டெல்லி ரட்யில்நிலையத்திற்குள் வரும் ரயிகளில் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி ரயில்நிலையம் இந்தியாவின் மிகவும் நெரிசல் அதிமுள்ள ரயில்நிலையங்களுள் ஒன்று. இந்த ரயில்நிலையத்திற்கு வரும் ரயில்களில் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனைக்குப் பின்னர் எந்த ரயிலிலும் சந்தேகத்திற்கு இடமான எந்தப்பொருட்களும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பு புரளியாகக் கூட இருக்கலாம். ஆனாலும், பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

காலை மிகுந்த நெருக்கடியாக இருக்கும் நேரம் என்பதால், டெல்லி ரயில்நிலையம் இன்று பரபரப்புடன் காணப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்