திருப்பதி திருமலை பெருமாள் கோயில் புரட்டாசி மாத பிரமோற்சவம் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாதத்தில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தினமும் பிரமோற்சவத்தைக் காண திருப்பதிக்குச் செல்வார்கள்.
திருப்பதி ஏழுமலையானுக்கு, படைப்பு கடவுளான பிரம்மன் முதல்முதலாக உற்சவத்தை நடத்தியதால் அது பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என இருமுறை விதவிதமான அலங்காரத்தில் நான்கு புற மாடவீதியுலா வருவார். இதனைக் காண கோவிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
இந்தாண்டு செப்டம்பர் 19ஆம் தேதி காலை, கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. வரும் 27ஆம் தேதியுடன் இந்த நிகழ்வு முடிவு பெறுகிறது. இந்தாண்டு கரோனா பரவலால் மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு காலை மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.