Skip to main content

'அடுத்தக்குறி இவர்தான்'- பகிரங்க மிரட்டலால் பதற்றத்தில் பாலிவுட் 

Published on 14/10/2024 | Edited on 14/10/2024
 'He's next' - Bollywood on edge over public threat

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உடைய கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த கொலை அரசியல் ரீதியான கொலையாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் தற்பொழுது சிறையில் இருக்கும் நிலையில் பாபா சித்தி கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

எப்படி சிறையிலிருந்து இந்த கொலையை திட்டமிட்டு லாரன்ஸ் நிறைவேற்றினார். சிறையில் தொலைபேசி வசதி உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்ததா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். மற்றொருவர் ஹரியானாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலரை பிடிக்க மொத்தமாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒய் பிளஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் அமைச்சர், அரசியல் பிரபலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 'He's next' - Bollywood on edge over public threat

ஏற்கனவே பிரபல நடிகர் சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் படுகொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கிற்கு சல்மான் கான் நெருக்கமானவர் என்பதால் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற அடிப்படையில் சல்மான்கான் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாபா சித்திக் உடலுக்கு அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் என பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் பாபா சித்திக் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய்  கூட்டாளி ஒருவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'நடிகர் சல்மான்கான் தான் சண்டையை தொடங்கி வைத்தார். அவருக்கு உதவி செய்ய நினைப்பவர்களுக்கு தான் அடுத்தகுறி வைக்கப்படும்' என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோருடனும் பாபா சித்திக் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்