மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று, அம்மாநிலத்தில் தேர்தலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணைய குழு, அரசியல் கட்சிகள், அம்மாநில தேர்தல் அதிகாரி, மாநிலத்தின் தலைமை செயலாளர், போலீஸ் டிஜிபி என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது.
இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையம், மணிப்பூர் மாநிலத்தின் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலை பிப்ரவரி 28 ஆம் தேதிக்கும், இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலை மார்ச் 5 தேதிக்கும் தள்ளிவைத்துள்ளது.
பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள், கள நிலவரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.