Published on 26/08/2022 | Edited on 26/08/2022
சுரங்க ஊழல் விவகாரத்தால் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் ஒன்றை முறைகேடாக தனது குடும்ப நிறுவனத்திற்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் அலுவலகத்திற்கு பரிந்துரைச் செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையை ஆளுநர் ரமேஷ் பையஸ் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.