Published on 05/10/2020 | Edited on 05/10/2020

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
இந்நிலையில், இன்று இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே ஹத்ராஸ்க்கு சென்ற ராகுல் காந்தி போலீசாரால் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.