Skip to main content

கலைஞர் அடிப்படையிலேயே ஒரு போராளி; நேரில் நலம்விசாரித்தபின் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி!

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

pinarayi

 

 

 

திமுக தலைவர்  கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது இன்று  கேரள முதல்வர் பினராயி விஜயன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞர் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

கலைஞர் அடிப்படையில் ஒரு போராளி, மன உறுதிகொண்டவர் அவரது உடல்நிலை தற்போது முன்னேறிவருவது மகிழ்ச்சியை தருகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி அவரது உடல்நிலை முன்னேறி வருகிறது என தெரிவித்துள்ளனர் எனக்கூறினார்.   

 

சார்ந்த செய்திகள்