Skip to main content

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு.

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

குஜராத் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


குஜராத் மாநிலத்தின் வடக்கு பனஸ்கந்தா மாவட்டம், அம்பாஜி சாலை வழியாக 70- க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான ஒரு சொகுசு பேருந்து திரிஷுல்யா காட் என்ற பகுதியில் மலைப்பாங்கான வளைவில் வளையும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த 50- க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

gujarat bus incident rescues peoples admit at hospital


இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்த தகவலை அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்