நடப்பு நிதியாண்டான 2018-2019-ல் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 20,000 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவதற்கான தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆணையத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 20,000 கோடி ரூபாயில், 10,000 கோடி ரூபாய் மீட்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆணையத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் மொத்தம் 1.2 கோடி நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுமெனவும், வரி விகிதங்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆணையத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.